நாளை தான் கடைசி தேதி.. நீலகிரி ஏகலவ்யா பள்ளியில் ஆசிரியர் வேலை.. முழு விவரம் இதோ...

Published : Aug 17, 2023, 10:39 AM ISTUpdated : Aug 17, 2023, 10:41 AM IST
நாளை தான் கடைசி தேதி.. நீலகிரி ஏகலவ்யா பள்ளியில் ஆசிரியர் வேலை.. முழு விவரம் இதோ...

சுருக்கம்

எழுத்துத் தேர்வு/நேர்காணல் அடிப்படையில் இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை நடத்தப்படும். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏகலவ்யா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 16-08-2023 முதல் 18-08-2023 வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரங்களை https://nilgiris.nic.in/ இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு/நேர்காணல் அடிப்படையில் இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை நடத்தப்படும். 

வேலைவாய்ப்பு விவரங்கள்

காலியிடம் :   9
விண்ணப்ப செயல்முறை தொடங்கிய தேதி : 16-08-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18-08-2023

தகுதி 

இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed, B.Sc, BA, M.Sc, MA ஏதேனும் பட்டப்பிடிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.Ed, B.Sc, BA, M.Sc, MA முடித்திருக்க வேண்டும். B.Ed உடன் தொடர்புடைய துறைகளில்  இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed உடன் தொடர்புடைய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தமிழ்நாடு போலீஸில் வேலை: ஆக.18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அடிப்படை ஊதியம் ரூ.15000 

இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு : ரூ.15,000 சம்பளம்
முதுலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு : ரூ.18,000

தேர்வு செயல்முறை : எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செயல்முறை நடத்தப்படும். விண்ணப்பம் ஆஃப்லைன் பயன்முறையில் அனுப்பப்பட வேண்டும் மற்றும் விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் வசூலிக்கப்படாது. அதன்படி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர், ஆட்சியர் வளாகம், ஃபிங்கர் போஸ்ட், ஊட்டி-643006 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான படிகள்

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது அறிவிப்புப் படிவத்தைப் பதிவிறக்கவும்
  • உங்கள் தகுதி விவரங்களைப் படித்து சரிபார்க்கவும்
  • அறிவிப்பைப் பதிவிறக்கவும்,
  • விண்ணப்பத்தில் உங்கள் விவரங்களை நிரப்பி அச்சிடவும்
  • பிரவுன் கலர் உறை உறையால் மூடி, கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Bank: மாதம் ரூ.96,000 சம்பளம் தேவையா? டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வேலைவாய்ப்பு!
Govt Training: நகை கடனை இனி நீங்கதான் கொடுக்க போறீங்க.! 5 நாட்களில் நகை மதிப்பீட்டாளராக சிறந்த வாய்ப்பு.!