NEET UG: அடுத்த நீட் தேர்வு 2024 மே 5ஆம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Published : Sep 19, 2023, 01:36 PM ISTUpdated : Sep 19, 2023, 02:24 PM IST
NEET UG: அடுத்த நீட் தேர்வு 2024 மே 5ஆம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சுருக்கம்

2024-25 ஆம் கல்வியாண்டில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET UG) 2024 மட்டுமே மே 5 அன்று நடைபெறும்.

2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. இத்துடன் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான கியூட் (CUET UG) தேர்வும் மே 15 முதல் மே 31 வரை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.

2024-25 ஆம் கல்வியாண்டில், கியூட் தேர்வு (CUET-UG) தேசியத் தேர்வு முகமையால் மே 15 முதல் 31 வரை நடத்தப்படும். கடைசித் தேர்வு நடந்த மூன்று வாரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் கூறியுள்ளார்.

ஜேஇஇ நுழைவுத் தேர்வின் (JEE) முதன்மைத் தேர்வு 2024 இல் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வின் முதல் அமர்வு ஜனவரியில் ஜனவரி 24 க்கு மற்றும் பிப்ரவரி 1 க்கு இடையில் நடத்தப்படும், அதே வேளையில், இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதம் ஏப்ரல் 1 மற்றும் 15 க்கு இடையில் நடைபெறும்.

சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி நீண்ட பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா எல்1!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET UG) 2024 மட்டுமே மே 5 அன்று காகித முறையில் நடத்தப்படும்.  2024 நீட் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 2024 இன் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதுகலை பட்டங்களுக்கான கியூட் (CUET PG) தேர்வு, மார்ச் 11 முதல் மார்ச் 28 வரை நடத்தப்படும். இவற்றுக்கான முடிவுகள் கடைசித் தேர்வின் மூன்று வாரங்களுக்குள் அறிவிக்கப்படும். CUET UG, JEE Main, NEET UG ஆகிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளங்கலை நுழைவுத் தேர்வுகள் பதிவு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2023ஆம் ஆண்டில், ஜேஇஇ தேர்வின் முதன்மை அமர்வு 1 ஜனவரி 24 மற்றும் ஜனவரி 31 க்கு இடையில் நடைபெற்றது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 2023 மே 7 அன்று நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளின் போக்குப்படி, 2024ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறும். 2023 இல் கியூட் (CUET UG) தேர்வு மே 21 மற்றும் ஜூன் 23 முதல் கட்டங்களாக நடைபெற்றது.

பழிக்குப் பழி! கனடாவின் தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

PREV
click me!

Recommended Stories

TN TRB Assistant Professor: தேர்வர்களே அலர்ட்.. வெளியானது உதவி பேராசிரியர் தேர்வு ஹால் டிக்கெட்! டவுன்லோட் லிங்க் இதோ!
Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!