
இந்நிலையில் மேற்குறிய பதவிகளுக்கான தேர்வுகள் குறித்த தேதிகள் வெளியாகியுள்ள நிலையில், நாளை செப்டம்பர் 17ம் தேதி, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இந்த இணைய பகுதிக்கு சென்று அப்ளை செய்யலாம்.
மொத்த காலிப் பணியிடங்கள்
இரண்டாம் நிலை காவலர் (மாநகர்/மாவட்ட ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு ஆயுதப்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 3,359 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 2,576 பணியிடங்கள் ஆண்களுக்கும்ம், 783 பணியிடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பள விவரம்
மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் ரூ.18,200 - ரூ.67,100 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 01-02-2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினு, சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது