நீட் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யூஜி (NEET UG) தேர்வு மே 7ம் தேதி மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க;- டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... வெளியானது வாய்மொழித்தேர்வு தேதி!!
இந்நிலையில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க;- 7500 காலிப் பணியிடங்கள்! எஸ்எஸ்சி தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு
இந்த ஹால் டிக்கெட்டுகளை http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெறுகிறது.