நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட் அமர்வு, 'நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை.மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு செல்ல விரும்பவில்லை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். திட்டமிட்டபடி கலந்தாய்வு நடக்கட்டும், அதனை நிறுத்த வேண்டாம்’ என்று கூறியுள்ளனர். இதனால் முதுகலை நீட் கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!