2024ஆம் ஆண்டு நீட் எம்.டி.எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு!

By SG BalanFirst Published Mar 10, 2024, 12:42 AM IST
Highlights

இன்டர்ன்ஷிப் காலக்கெடுவும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, NEET MDS 2024 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை மீண்டும் திறக்க மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) 2024ஆம் ஆண்டுக்கான நீட் எம்.டி.எஸ் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதனால் மார்ச் 11ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 11:55 மணி வரை விண்ணப்பிக்கும் வாய்ப்பு திறந்திருக்கும்.

மேலும், இன்டர்ன்ஷிப் காலக்கெடுவும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, NEET MDS 2024 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை மீண்டும் திறக்க மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

“சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2024 நீட் எம்டிஎஸ் தேர்வுக்கு தகுதி பெறுவதற்காக இன்டர்ன்ஷிப்பை முடிப்பதற்கான கட்-ஆஃப் தேதி ஜூன் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்க போனாலும் மக்கள் எங்களைத் தான் பாராட்டுராங்க! குஷியாக போட்டோ போட்ட பிரதமர் மோடி!

இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை தங்கள் இன்டர்ன்ஷிப்பை முடிக்கும் விண்ணப்பதாரர்கள், NEET MDS தேர்வுக்கு natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வதற்கான தேதியையும் திருத்தியுள்ளது. நீட் பிடிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் மார்ச் 15, வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். மார்ச் 18ஆம் தேதி திங்கட்கிழமை தேர்வு நடைபெறுதம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான மாநிலத்தில் தேர்வு மையத்தைத் தேர்வு செய்யலாம். இருக்கும் இடத்தைப் பொறுத்து தேர்வு செய்யப்பட்ட மாநிலத்திலோ அல்லது அருகிலுள்ள மாநிலத்திலோ தேர்வு மையம் ஒதுக்கப்படும்.

திமுக ஆட்சி குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை போல உள்ளது: மத்திய அமைச்சர் எல். முருகன்

click me!