பெண்களுக்கு இலவச டிரோன் பயிற்சி... 10வது படித்திருந்தாலே போதும்- மத்திய அரசின் புதிய திட்டம்

By Ajmal KhanFirst Published Mar 9, 2024, 6:42 PM IST
Highlights

 விவசாய பயிர்களை காக்க டிரோன் மூலமாக மருந்து தெளிக்க பெண்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில், "நமோ ட்ரோன் திதி யோஜனா" திட்டத்தில் 1000 பெண்களுக்கு டிரோன் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10வது படித்திருந்தாலே போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

பெண்களுக்கு டிரோன் பயிற்சி

மத்திய அரசுடன் இணைந்து, "நமோ ட்ரோன் திதி யோஜனா" திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பங்காற்று வருகிறது.இந்தநிலையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம் குறித்து கருடா நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன் மூலமாக விவசாயத்தில் அறிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் தேவைகளை மிக எளிதாக பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார்.  

1000 பெண்களுக்கு டிரோன் வழங்கும் மோடி

இந்நிலையில், மத்திய அரசுடன் இணைந்து "நமோ ட்ரோன் திதி யோசனா" திட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 1000பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். தற்போது வழங்க இருக்கும் இந்த பயிற்சி மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11இடங்களில், 1000ட்ரோன்களை பிரதமர் மோடி ட்ரோன்களை வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்றார்.

10வது படித்திருந்தாலஏ போதும்

தற்போது, கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தவர்,  முதற்கட்டமாக அவர்களுக்கு அக்ரி ட்ரோன் மூலமாக ஸ்பிரே எவ்வாறு தெளிக்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.  இந்த பயிற்சிக்கு அவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது  அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்,எந்தவித கட்டணமும் கிடையாதுமுற்றிலும் இலவசம் என குறிபிட்டார்.

இதையும் படியுங்கள்

ரூ.58,000 சம்பளத்தில் மருதமலை முருகன் கோயிலில் வேலை.. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. முழு விவரம் இதோ..

click me!