ICMR-NIE சென்னை வேலைவாய்ப்பு.. தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் தேவை - எப்படி விண்ணப்பிப்பது?

By Ansgar R  |  First Published Oct 27, 2023, 6:46 PM IST

சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணிபுரிய தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 


பணி விவரம்

தொழில்நுட்ப உதவியாளர் - 33 காலி பணியிடங்கள் 

Latest Videos

undefined

ஆய்வக உதவியாளர்கள் - 14 காலி பணியிடங்கள்

TNPSC.. இரு முக்கிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வயது வரம்பு 

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 30 வயதுக்கு மிகாமலும், ஆய்வக உதவியாளர் பணிக்கு 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ICMR நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வயது தளர்வு குறித்த தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

ICMRரின் அதிகாரப்பூர்வ இணையதளமான nie.gov.in மூலம் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வெழுதும் மையங்கள் 

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் விண்ணப்பதாரர்கள் தேர்வுகளை எழுத முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

கூடுதல் தகவல்கள் பெற https://nie.gov.in/images/pdf/careers/Technical_Recruitment_2023_-_Detailed_Advertisement.pdf என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

click me!