1,412 பேருக்கு தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு.. 10வது படித்தால் போதும் !

By Raghupati R  |  First Published Aug 21, 2022, 6:25 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்  தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதித்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


தேர்வாளர், ரீடர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், ஜூனியர் மற்றும் சீனியர் சட்ட அலுவலர் மற்றும் பிற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  அனைத்து பதவிகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) உயர்நிலைப் படிப்புகளில் (அல்லது) கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் (Xerox Operator) பதவிக்கு மட்டும் கூடுதலாக ஜெராக்ஸ் இயந்திரத்தை இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன்னனுபம் இருக்க வேண்டும். ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி நாள் : 22.8.2022

விண்ணப்பிக்கும்போதே, தாங்கள் பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. கட்டணம்  அறிவிப்பில் காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வின் பகுதி I மற்றும் பகுதி II ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். இடஒதுக்கீட்டு வீதியைப் பின்பற்றி, தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதப்படி  சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர்.

மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

click me!