சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை : டிகிரி போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..!

By Kalai Selvi  |  First Published Jan 16, 2024, 2:17 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் உள்ளே..


சென்னை உயர்நீதிமன்றம்  தட்டச்சர், தொலைபேசி ஆபரேட்டர், காசாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு மொத்தம் 33 காலி பணியிடங்கள் உள்ளன. அரசு பணிக்கு தயாராகிக் கொண்டிருப்போர் இந்த பணிக்கு 13.02.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்ற அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்..

வேலை விவரங்கள்:
தட்டச்சர் - 22
தொலைபேசி ஆபரேட்டர் - 01
காசாளர் - 02
ஜெராக்ஸ் ஆபரேட்டர் - 08

Latest Videos

undefined

காலி பணியிடங்கள்: 
சென்னை உயர்நீதிமன்றம் பணிக்கான காலி பணியிடங்கள் மொத்தம் 33 ஆகும்.

கல்வி தகுதி: 
சென்னை உயர் நீதிமன்றம் பணிக்கான கல்வி தகுதி டிகிரி அவசியம். மேலும் விவரங்கள் அறிவிப்பில் உள்ளது.

இதையும் படிங்க:  ஐடிஐ படித்தவர்களா நீங்கள்? அப்படினா செம சான்ஸ்.. அரசு வேலையில் ரூ.71,000 வரை சம்பளம்..!

சம்பளம்:
தட்டச்சு:  ரூ.19,500 - 71,900
தொலைபேசி ஆபரேட்டர்: ரூ.19,500 - 71,900
காசாளர்: ரூ.19,500 - 71,900
ஜெராக்ஸ் ஆபரேட்டர்: ரூ.16,600 - 60,800

இதையும் படிங்க:   ஆசிரியர் தகுதித் தேர்வு : 7 வகைப் பணிகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி..!

தேர்வு நடைமுறை:
பொதுவான எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தேர்வு நடத்தப்படும்.

வயது தகுதி:
சென்னை உயர் நீதிமன்றம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். இருந்த போதிலும் பி.சி, எம்.பி.சி, பி.சி.எம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விண்ணப்பக் கட்டணம்:
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய். 500

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in இல் விண்ணப்பிக்க வேண்டும்.
  • எந்த ஒரு தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
  • அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்
  • பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
click me!