ஐடிஐ படித்தவர்களா நீங்கள்? அப்படினா செம சான்ஸ்.. அரசு வேலையில் ரூ.71,000 வரை சம்பளம்..!

Published : Jan 12, 2024, 03:33 PM IST
ஐடிஐ படித்தவர்களா நீங்கள்? அப்படினா செம சான்ஸ்.. அரசு வேலையில் ரூ.71,000 வரை சம்பளம்..!

சுருக்கம்

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசிதழ்கள் / சிறப்பு வெளியீடுகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்புகள், பல்வேறு சட்டமன்ற குழுக்களின் அறிக்கைகள், வரவு செலவு திட்ட ஆவணங்கள்அதிரகசிய பணிகள், தேர்தல் படிவங்கள், பதிவேடுகள், கையேடுகள் மற்றும் வாக்குச் சீட்டுகள், தமிழ்நாடு மாநில கணக்காய்வுத் தலைவரின் அறிக்கைகள் உள்ளிட்ட அரசின் பல முக்கிய ஆவணங்கள் இங்குதான் பிரிண்ட் ஆகின்றன. இந்த அச்சு அலுவலக்த்தில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்: 

ஜூனியர் மெக்கானிக் (01), ஜூனியர் எலக்ட்ரிஷியன் (01), அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் (19), சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் (01). டைம் கீப்பர் (02) என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

வயது வரம்பு:

18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.  பிசி, எம்.பி.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும் , எஸ்.சி/எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

ரூ.18,200 முதல் ரூ.1,30,800 வரை சம்பளம் கிடைக்கும்

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, பிசிஏ, பிஎஸ்சி மற்றும் சிஎஸ்சி/ஐடி

தேர்வு செய்யும் முறை: 

எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம் 11, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 31.01.2024 ஆகும் .

 தேர்வு அறிவிப்பை படிக்க இங்கே http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf கிளிக் செய்யவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!
Job Alert: சமைக்க தெரிந்தால் போதும்.! ரூ.70,000 மாத சம்பளம் கிடைக்கும்.!