ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்காக, ஆசிரியர் தேர்வாணையமானது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
undefined
இதையடுத்து, இந்த தேர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பலர் மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் மற்றும் இரண்டாம் நாள் தேர்வு, ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
டெட் தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இதில் அறிவிக்கப்படவில்லை. முதுநிலைப் பட்டதாரி உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 200 பணியிடங்களைக் கொண்ட இதற்கான தேர்வு குறித்த அறிவிக்கை மே மாதம் வெளியாக உள்ளது.
மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!!