8ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!

Published : Mar 13, 2023, 08:17 AM IST
8ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!

சுருக்கம்

கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கள் நிறுவனத்தில் உள்ள 15 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளைக்கு சேர இது சரியான வாய்ப்பு. இந்த வேலைக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 20.02.2023 முதல் 15.03.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

அமைப்பு : கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி

வேலை வகை : கல்லூரி வேலை

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

பணியிடம் : தஞ்சாவூர்

தகுதி : 8 ஆம் வகுப்பு 

காலியிடங்கள் : 15

தொடக்கத் தேதி : 20.02.2023

கடைசி தேதி : 15.03.2023

காலியிடங்கள் : 

அலுவலக உதவியாளர் - 15 பணியிடங்கள்

கல்வி தகுதி : 

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 8வது படித்திருந்த விண்ணப்பதாரர்கள் அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 

அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளாக இருக்கலாம் என்றும், அதிகபட்ச வயது 37 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : 

அரசு விதிகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு அளிக்கப்படலாம். 

சம்பள விவரங்கள் : 

அலுவலக உதவியாளர் - ரூ.15,700 – 50,000/- PM

தேர்வு முறை : 

நேர்காணல்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர் (i/c), அரசு நுண்கலை கல்லூரி, மேலகாவேரி அஞ்சல், சுவாமிமலை மெயின் ரோடு, கும்பகோணம்-612002. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும், மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க..தமிழக அரசின் TNPLல் அருமையான வேலைவாய்ப்பு.. மாதம் 31,000 சம்பளம்.. முழு விபரம் உள்ளே !!

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now