BEL Recruitment 2023: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை! எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

By SG Balan  |  First Published Mar 12, 2023, 3:53 PM IST

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் எஞ்சினியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விரும்பமும் உள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்.


மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் இயங்கிவருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அதன் தலைமையகம் உள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரிப்பது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

Latest Videos

undefined

பெல் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் என்ஜினீயர் - I  பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், விசாகப்பட்டினம் (ஆந்திரா), கொச்சி (கேரளா), கோவா, மும்பை (மகாராஷ்டிரா), போர்ட் பிளேயர் (அந்தமான்) ஆகிய இடங்களில் பணிக்கு அமர்த்துப்படுவார்கள்.

பரீட்சை பயமா.? தன்னம்பிக்கையோட எழுதுங்க.! 10,11,12 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரை

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 01.03.2023 அன்று 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

அங்கீகாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் பிஇ, பிடெக் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

சம்பளம்:

ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு முதல் ஆண்டில் ரூ.40 ஆயிரம், இரண்டாவது ஆண்டு ரூ.45 ஆயிரம், மூன்றாவது ஆண்டு ரூ.50 ஆயிரம் மாத ஊதியம் கிடைக்கும். ஏற்கெனவே பெல் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் என்றால் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்.

தமிழக அரசின் TNPLல் அருமையான வேலைவாய்ப்பு... மாதம் 31,000 சம்பளம்... முழு விபரம் உள்ளே!

தேர்வு செய்யும் முறை:

முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்ளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் ரூ.400. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பது  எப்படி?

இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கிடையாது. பென் நிறுவனத்தின் இணையதளத்தில் (https://www.bel-india.in/) விண்ணப்பத்தை டவுன்லோட் செய்யலாம். அதனை பிரிண்ட் எடுத்து முழுமையாக பூர்த்தி செய்து தக்க சான்றிதழ்களை இணைத்து மார்ச் 25ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி:

Sr. Gen. Manager (HR / Military Communications & MR),

Bharat Electronics Limited,

Jalahalli Post,

Bengaluru 560013

12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.? முழு விபரம்

விண்ணப்பம் அனுப்பும் தபால் உறையில் Application for the post of Project Engineer / Mil Com SBU என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெல் நிறுவன இணையதளத்தில் டவுன்லோட் செய்யலாம். அல்லது கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

பெல் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் என்ஜினீயர் - I  பணிக்கான விண்ணப்பத்தையும் பெல் இணையதளத்தில் பெறலாம். அல்லது கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Click Here to Download Application for the post of Project Engineer in Bharat Electronics Limited (BEL)

click me!