நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும். அதேபோல், 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆஃப்லைன் முறையில் ஏப்ரல் 3ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.
இதையும் படிங்க;- மாணவர்களே.!! இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் - முழு விபரம்
கேந்திரிய வித்யாலயா சேர்க்கை 2023-24: எப்படி விண்ணப்பிப்பது?
* www.kvsonlineadmission.kvs.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
* பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* தேவையான சான்றுகளை உள்ளிட்ட பிறகு கட்டணம் செலுத்தவும்.
சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும். ஒரே கேந்திரிய வித்யாலயாவில் ஒரு குழந்தைக்கு ஒரு விண்ணப்பப் படிவத்தை பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டும். பல படிவங்களை சமர்ப்பித்தால், கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட படிவம் மட்டுமே பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- EPFO-வில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!