10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் (மார்ச் 27) ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் வருகிற 27-தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல, பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் மாணவர் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளரை அணுகி திருத்தம் செய்து கொள்ள வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
இதையும் படிங்க..இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!