இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Dec 14, 2022, 7:22 PM IST

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 60 ஆயிரத்து 544 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தேர்தெடுக்கப்படும் நபர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள அஞ்சலகங்களில் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Latest Videos

undefined

பதவிகள்: 

  • Postman 
  • Mail Guard

காலிப்பணியிடங்கள்:

  • Postman -59,099
  • Mail Guard - 1,445

இதையும் படிங்க: இப்போ சொல்லுங்க யார் ‘பப்பு’? சொல்லுங்க.? டேட்டாவை சொல்லி நாடாளுமன்றத்தை அதிர வைத்த திரிணாமுல் எம்.பி

தகுதிகள்: 

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது மாநில மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 
  • இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டியது அவசியம்.

ஊதிய விவரம்:

  • லெவல்-3 இன் படி (Level-3 in the pay matrix) ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: ‘பயப்பட தேவையில்லை.. எல்லாம் சரியா இருக்கு.. நாங்க இருக்கோம்’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி !

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேவையான கல்வி ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx -யை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

  • 14.12.2022
click me!