எஸ்.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு... ரூ.41,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Apr 5, 2023, 6:35 PM IST

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பாரத ஸ்டேட் வங்கியில் (SBI- State Bank of India) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள்  என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Latest Videos

undefined

பணி: 

  • Channel Manager Facilitator -Anytime Channels (CMF-AC)
  • Channel Manager Supervisor- Anytime Channels (CMS-AC)
  • Support OfficerAnytime Channels (SO-AC)

காலிப்பணியிடங்கள்: 

  • மொத்தம் - 1031
  • சென்னையில் மட்டும் - 89

கல்வித் தகுதி: 

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் / எஸ்.பி.ஐ. வங்கியில் பணிபுரிந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை. 
  • சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • திறம்பட வேலை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

பணிப்புரியும் இடம்:

  • தேர்ந்தெடுக்கப்படுவோர் மும்பை, அகமதாபாத், புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, ஹைதராபாத், ஜெய்பூர், பாட்னா, அமராவதி, புது டெல்லி, கொல்கத்தா, கெளகாத்தி, பெங்களுரூ, லக்னோ, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள 87 பணியிடங்கள் நிரப்ப சென்னை என்ற மண்டலத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊர்களில் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

வயது வரம்பு:

  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.05.2017 -இன் படி 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
  • 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
  • பணி கான்ட்ரான்ட் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம்: 

  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 30 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம் :

  • Channel Manager Facilitator -Anytime Channels (CMF-AC) - ரூ.36,000
  • Channel Manager Supervisor- Anytime Channels (CMS-AC) - ரூ.41,000
  • Support OfficerAnytime Channels (SO-AC) - ரூ.41,000

இதையும் படிங்க: குரூப் 4 சர்ச்சை: போலி விளம்பரம் பயிற்சி மையங்களை ஒழிக்க வேண்டும்; டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கருத்து

தேர்வு செய்யும் முறை:

  • நிரந்தர பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 
  • ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 
  • நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும். இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பணி காலம்:

  • இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி? 

கடைசி நாள்:

  • 30.04.2023
click me!