மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Apr 4, 2023, 11:24 PM IST

மத்திய அரசில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை நிரப்ப, பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு 2023க்கான ஆன்லைன் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. 


மத்திய அரசில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை நிரப்ப, பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு 2023க்கான ஆன்லைன் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

  • மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்கள், அமைப்புகள் மற்றும் பிற அரசியலமைப்பு அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பல குரூப் பி மற்றும் குரூப் சி காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுகிறது. 

Tap to resize

Latest Videos

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: தமிழக வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அறிவிப்பு; எந்த தேர்வும் கிடையாது

விண்ணப்பிப்பது எப்படி? 

  • SSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.nic.in க்குச் செல்லவும்.
  • அதில் registration link இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் SSC CGL 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி, அத்தியாவசியக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
  • சமர்பிக்கப்பட்ட படிவத்தை சேமித்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • உறுதிப்படுத்தல் பக்கத்தை எதிர்கால தேவைக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். 

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பதாரர்கள் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். 
  • பெண்கள், SC, ST, PwD மற்றும் ESM விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. 

இதையும் படிங்க: குரூப் 4 சர்ச்சை: போலி விளம்பரம் பயிற்சி மையங்களை ஒழிக்க வேண்டும்; டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கருத்து

தேர்வு செய்யும் முறை:

  • ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு -I மற்றும் நிலை தேர்வு -II என இரண்டு அடுக்குகளில் நடத்தப்படும். 
  • நிலை-II தேர்வில் மட்டுமே விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். 

கடைசி தேதி:

  • 03.05.2023
click me!