குரூப் 4 சர்ச்சை: போலி விளம்பரம் பயிற்சி மையங்களை ஒழிக்க வேண்டும்; டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கருத்து

By SG Balan  |  First Published Apr 4, 2023, 1:45 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் போலி விளம்பரம் தேடும் பயிற்சி மையங்களை ஒழிக்கவேண்டும் என்ற தேவாணைய உறுப்பினர் ஒருவர் சொல்கிறார்.


குரூப் 4 சர்ச்சையில் டிஎன்பிஎஸ்சி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பயிற்சி மையங்கள் இடையே நிலவும் போட்டிதான் காரணம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டுகிறார்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகின. இந்த தேர்வில் சில பயிற்சி மையங்களில் படித்த தேர்வர்கள் அதிக அளவில் தேர்வானார்கள். இதுதொடர்பாக வெளியான  தகவல்களால் குரூப் 4 தேர்வு குறித்து பலரும் சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

தமிழக வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அறிவிப்பு; எந்த தேர்வும் கிடையாது

அதே சமயத்தில் சில தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு முடிவுகளே வெளியாகவில்லை என்று புகார் கூறுகின்றனர். அவர்கள் விண்ணப்பத்தில் தவறு நேர்ந்ததாக சொல்லப்படுகிறது என்றும் ஆனால் அதுகுறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை என்றும் சொல்கின்றனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால், சட்டப்பேரவையில் பேசிய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்யவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ், போலி விளம்பரங்களை தேடும் பயிற்சி மையங்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்பகு இடையில் நடக்கும் போட்டிக்கு டிஎன்பிஎஸ்சி பலிகடா ஆக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை! குடிநீர் வாரியத்தில் 108 பணியிடங்கள்!

click me!