கரூரில் ரூ.30,000 ஊதியத்துடன் அரசு வேலை! பெண்கள் மட்டும் உடனே விண்ணப்பிக்கலாம்!

By SG Balan  |  First Published Apr 24, 2023, 4:34 PM IST

கரூரில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, முதுநிலை ஆலோசகர், வழக்குப்பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


கரூர் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

மைய நிர்வாகி, முதுநிலை ஆலோசகர், வழக்குப்பணியாளர் என மூன்று வெவ்வேறு பணிகளில் மொத்தம் தலா ஒரு காலிப் பணியிடம் இருக்கிறது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வேலைவாய்ப்புகளுக்கு  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மைய நிர்வாகி (Center Admin)

மைய நிர்வாகி பணிக்கு மாதச் சம்பளம் ரூ.30,000 கொடுக்கப்படும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள் ஆலோசனை உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். 

 

முதுநிலை ஆலோசகர் (Senior Counselor)

முதுநிலை ஆலோசகர் வேலைக்கு மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருப்பதும் அவசியம்.

வழக்குப்பணியாளர் (Case Worker)

வழக்குப்பணியாளர் பணிக்கு ரூ.15,000 மாத ஊதியம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், சமூகவியல் முதுநிலை சமூக உளவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. https://karur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.

Job Opportunity in District Social Welfare and Women Empowerment Department

முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி:

மாவட்ட சமூக அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கரூர் மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.4.2023

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

click me!