புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Junior Project Research Fellow பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 2 காலியிடங்கள் உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் வரும் 25-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
undefined
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொடர்பான படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வயது வரம்பு :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம், உரிய விவரங்களுடன் பூர்த்தி செய்து htarcjipmer@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 25.11.2023. அதற்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஜிப்மர் நிர்வாகம் முழுக்க முழுக்க தற்காலிக அடிப்படையில் 7 மாதங்களுக்கு மட்டுமே இந்த காலியிடங்களை நிரப்ப உள்ளது. எனினும் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
சம்பளம் : விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.