ரயில்வே துறையில் ரூ.9,000 உதவித்தொகையுடன் அட்டகாசமான வேலை வாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை எப்படி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Nov 14, 2023, 9:54 AM IST

இந்திய ரயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் கொங்கன் ரயில்வே. அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரயில்வே அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு கொங்கன் ரயில் நிறுவனம் இயங்கி வருகிறது. 


கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் Trainee Apprentices பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்திய ரயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் கொங்கன் ரயில்வே. அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரயில்வே அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு கொங்கன் ரயில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், பயிற்சி அப்ரண்டிஸ்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. 

Latest Videos

undefined

இதில், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பக்கிலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்:    

கொங்கன் ரயில்வே

பணியின் பெயர்:    

பயிற்சி அப்ரண்டிஸ்கள்

பணியிடங்கள்:    

190

விண்ணப்பிக்க கடைசி தேதி:    

10.12.2023

விண்ணப்பிக்கும் முறை:    

ஆன்லைன்

ரயில்வே காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Trainee Apprentices பணிக்கு மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியலில் பட்டப்படிப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்/எஸ்டி/ பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் 27 வயது இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Graduate Apprentices – ரூ.9000/-

Technician (Diploma) Apprentices – ரூ.8000/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!