JEE Main Results: ஜே.இ.இ. முதன்மை தேர்வுவில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் முதலிடம்

By SG BalanFirst Published Feb 14, 2024, 8:44 AM IST
Highlights

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் இந்த ஆண்டு ஜே.இ.இ தேர்வை எழுதி முதலிடம் பெற்றுள்ளார். முழு மதிப்பெண் பெற்ற 23 பேர்களில் ஒருவராக வந்துள்ள மாணவர் பிரதீஷ் 300க்கு 300 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நெல்லையைச் சேர்ந்த மாணவர் 300க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகிளல் எஞ்சினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்காக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 23 மாணவர்கள் 300க்கு 300 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

திருச்சியில் வேலை! தேசிய தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர் பணிக்கு அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் இந்த ஆண்டு ஜே.இ.இ தேர்வை எழுதி முதலிடம் பெற்றுள்ளார். முழு மதிப்பெண் பெற்ற 23 பேர்களில் ஒருவராக வந்துள்ள மாணவர் பிரதீஷ் 300க்கு 300 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமைச்சர் மகேஷ் வாழ்த்து:

மாணவர் முகுந்த் பிரதீஷ் படைத்துள்ள இந்தச் சாதனைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மகேஷ், "திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 11 இலட்சம்… pic.twitter.com/2nGGB4fBDl

— Anbil Mahesh (@Anbil_Mahesh)

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 11 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். 

இவர்களுள் அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்களுள் ஒருவராகச் சாதனைப் புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கும், அவருக்கு  உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்." என்று கூறியுள்ளார்.

இனி சார்ஜர் தேவை இல்ல... மொபைலை பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகிவிடும்!

click me!