இந்திய ரயில்வே வடகிழக்கு பிராந்தியத்தில் 5636 பணியிடங்கள்... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

By Kevin Kaarki  |  First Published Jun 29, 2022, 5:28 PM IST

மெரிட் லிஸ்ட் தயாரான பின், அவை வடகிழக்கு பிராண்டியர் ரயில்வேயின் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு விடும். 


இந்திய ரயில்வே வடகிழக்கு பிராந்தியத்தில் காலியாக உள்ள பணி இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 30) கடைசி நாள்.  வடகிழக்கு பிராந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 636 பணி இடங்களில் வொர்க்‌ஷாப் மற்றும் யூனிட்களில் அப்ரென்டிஸ் பணியில் சேர்வதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அப்ரென்டிஸ் சட்டம் 1961-இன் கீழ் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. 

இதையும் படியுங்கள்: மாணவர்களுக்கு ரூ. 46 லட்சத்தில் வேலை.. என்.ஐ.டி. ரூர்கேலா அதிரடி...!

Tap to resize

Latest Videos

தேர்வர்கள் ஆன்லைன் வழியில் RRC/NFR வலைதளமான www.nfr.indianrailways.gov.in இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். 

வடகிழக்கு பிராண்டியர் ரயில்வே யூனிட்கள் மற்றும் ரியல்வே பணி நியமன பிரிவு, வடகிழக்கு பிராண்டியர் ரயில்வேயில் அப்ரென்டிஸ் பணியில் சேர்வதற்கு விடுக்கப்பட்டு இருக்கும் மத்திய அறிவிக்கை ஆகும். இதற்கு விண்ணப் படிவத்தின் அசல் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. 

இதையும் படியுங்கள்: உங்களை உடனடி பணக்காரர் ஆக செய்யும் வேலை வாய்ப்புகள்.. இது மட்டும் தெரிந்தால் போதும்..!

மெரிட் லிஸ்ட் தயாரான பின், அவை வடகிழக்கு பிராண்டியர் ரயில்வேயின் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 

வடகிழக்கு பிராண்டியர் ரயில்வே 

சேர்வதற்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 15 வயதை பூர்த்தி செய்து ஏப்ரல் 1, 2022 வரையிலான காலக்கட்டத்தில் 24 வயதை பூர்த்தி செய்திருக்க கூடாது. 

இதையும் படியுங்கள்: 100 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு... மாஸ் காட்டிய ஐஐடி மெட்ராஸ்...!

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கும் இணையான கல்வியில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இத்துடன் ஐடிஐ சான்று வைத்து இருக்க வேண்டும். சான்றிதழ்களின் புகைப்படங்கள் அனைத்தும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 

வடகிழக்கு பிராண்டியர் ரயில்வே விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் RRC/NFR’s websitewww.nfrmndianrailwavs.gov.in வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.டி. பி.டபிள்யூ.டி. மற்றும் மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு எவ்வித விண்ணப்ப கட்டணமும் இல்லை. மற்ற பிரிவினர் ரூ. 100 செலுத்த வேண்டும். 

விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். இதற்கான பரிவர்த்தனை கட்டணங்களை விண்ணப்பதாரர்கள் தான் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை அப்லோடு செய்வது அவசியம் ஆகும். 

click me!