மாதம் 2.50 லட்சம் சம்பளத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருத்தால் போதும்..

By Thanalakshmi VFirst Published Sep 4, 2022, 12:35 PM IST
Highlights

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Assistant Commandant பதவிகளை நிரப்புவதற்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

நிறுவனத்தின் பெயர்: Indian Coast Guard

பணியின் பெயர்  : Assistant Commandant

பணியின் விவரம்: 

General Duty (GD), CPL (SSA) பதவிகளில் 50 பணியிடங்களும் 
Tech (Engg), Tech (Elect) பதவிகளில் 20 பணியிடங்களும் 
Law – 1 பணியிடங்களும் காலியாக உள்ளன. 

மொத்த காலி பணியிடங்கள்: 71 

விண்ணப்பிக்கும் தேதி: 

காலியாக உள்ள பதவிகளுக்கு வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை    : 

இந்த பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பம் பெற்றும், அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க:யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி ..? முழு விவரம்

விண்ணப்பக் கட்டணம்:

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினை சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கல்வி தகுதி:

Assistant Commandant (General Duty (GD) (Male) பணி- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Assistant Commandant (Commercial Pilot Licence (SSA) பணி- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Assistant Commandant Technical (Mechanical) (Electrical/Electronics) பணி- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

Law Entry பணி-  அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது :

Assistant Commandant (General Duty) - 25 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். 

Assistant Commandant (Commercial Pilot Entry (CPL-SSA)) - 25 - 19 வயதுக்குள் இருக்க வேண்டும். 

Assistant Commandant Technical (Mechanical,(Electrical/Electronics) )  - 25 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Law Entry -  28 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

Assistant Commandant – ரூ. 56,100/-
Deputy Commandant – ரூ.67,700/-
Commandant (JG) – ரூ.78,800/-
Commandant – ரூ.1,18,500/-
Deputy Inspector General – ரூ.1,31,100/-
Inspector General – ரூ.1,44,200/-
Additional Director General – ரூ.1,82,200/-
Director-General – ரூ.2,05,400/-

தேர்வு செய்யப்படும் முறை: 

Computer Based Examination, Psychological Test, Group Task மற்றும் Interview, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 
 

மேலும் படிக்க: இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? விவரம் உள்ளே

click me!