மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
சிபிஐ மற்றும் உள்ளூர் காவல்துறையில் இருந்து 10 வருட அனுபவமுள்ள இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கு மேல் உள்ள ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து பைர்வி பணிக்கான (Pairvi Officer) ஆலோசகரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக இருக்க வேண்டும். இந்த பதவிக்கு, 01 ஆகஸ்ட் 2022 அன்று நபர் 64 வயதை எட்டாதவராக இருத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஆலோசகராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, ரூ.40000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் (சிபிஐ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த பிறகு) மண்டலத் தலைவர், மத்திய புலனாய்வுப் பிரிவு, சென்னை மண்டலம், 3வது தளம், ஈவிகே சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், 30.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது பற்றிய தகவல்களை அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !