அக்னி வீர் ராணுவப் பணி எழுத்துத் தேர்வுக்கான அட்மிட் கார்டு இந்திய ராணுவ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி வரை டவுன்லோட் செய்யலாம்.
அக்னிவீர் எழுத்துத் தேர்வுக்கான அட்மிட் கார்டை புதன்கிழமை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த அட்மிட் கார்டை உடனடியாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்திய ராணுவத்தின் joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.
அட்மிட் கார்டுடன், அக்னிவீர் எழுத்துத் தேர்வு தொடர்பான இந்திய ராணுவத்தின் சமீபத்திய அறிவிப்புகளையும் அறிந்துகொள்வது அவசியம். அக்னிவீர் எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் விவரங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம். விண்ணப்பித்தவர்கள் இன்றே அட்மிட் கார்டைப் பெறலாம்.
undefined
அக்னிவீர் எழுத்துத் தேர்வுக்கு பதிவு செய்த அனைத்து விண்ணப்பதாரர்களும் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்துகொண்டு, தேர்வு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு சரியான நேரத்தில் தயாராக தேர்வுக்கு வர வேண்டும்.
ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகியுள்ள அக்னிவீர் எழுத்துத் தேர்வுக்கான அடையாள அட்டையை நான்கு நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். அதாவது அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்ய ஏப்ரல் 8ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Indian Army Admit Card 2023: How To Download Agniveer Call Letter