2023-24 கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 6) கடைசி நாள் ஆகும்.
2023-24ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நேரடி முறையில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் இந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது.
விண்ணிப்பிக்க அளிக்கப்பட்ட அவகாசம் இன்று (ஏப்ரல் 6) முடிகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது பற்றிய கூடுதல் தகவல்களை தேசிய தேர்வு முகமையின் https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
NEET UG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? இதோ முழு விவரம்!
தொலைப்பேசி வழியில் உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் (NEET) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.
நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்