தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், 11ம் வகுப்புகளுக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை இன்று 9.76,089 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், 11ம் வகுப்புகளுக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கான அட்டவணை மற்றும் முடிவு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்பாட தேர்வும் வரும் 10ஆம் தேதி ஆங்கிலம்13ஆம் தேதி, கணிதம், 15ஆம் தேதி விருப்ப மொழிப் பாடம், 17ஆம் தேதி அறிவியல், 20ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறவுள்ளது.
இந்த பொதுத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடக்கிறது. வினாத் தாள்களை படிக்க 15 நிமிடங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. 12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
ஏற்கனவே 12ம் வகுப்பு தமிழ் உள்ளிட்ட பாடத்தில் 50,000க்கும் மேற்பட்டோர் எழுதாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 10ம் வகுப்பு தேர்வை முழுமையாக மாணவர்கள் தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.