
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமான என்.ஐ.ஆர்.டி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் என்.ஐ.ஆர்.டி. யில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, ICMR-National Institute for Research in Tuberculosis (ICMR-NIRT) தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு மொத்தம் 73 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 73 காலியிடங்களில், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் மொத்தம் 60. ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மொத்தம் 13 காலியிடங்கள் ஆகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கல்வித்தகுதி
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் குரூப் பி பணியிடங்களுக்கு 3 ஆண்டு இளங்கலைப் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது மைக்ரோ பயாலஜி, மெடிக்கல் லெபாரட்ரி டெக்னாலஜி, பயோ ஸ்டேட்டிஸ்கிக்ஸ், பார்மஸி, மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பயோ மெடிக்கல் சயின்சஸ் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் - 1 குரூப்-சி பணிக்கு விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட/பதிவு செய்யப்பட்ட ஆய்வகத்தில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது ஆய்வக உதவியாளர் பதவிக்கு 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிகளுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுகள் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஒதுக்கப்பட்ட பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெறும். கணினி அடிப்படையிலான தேர்வில் விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில், மற்ற அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவார்கள்.
12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இந்திய ரயில்வேயில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சம்பளம் :
தொழில்நுட்ப உதவியாளர் குழு B பணிக்கு : ரூ. 35,400 – ரூ.1,12,400 வரை சம்பளம் இருக்கும்.
ஆய்வக உதவியாளர் - ரூ. 18000/ – ரூ.56900/- வரை சம்பளம் இருக்கும்.
ஐசிஎம்ஆர் என்ஐஆர்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க் முடியும். வேறு எந்த முறையிலிருந்தும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கடைசி நிமிட தொழில்நுட்ப சிக்கலைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப் பிரிவினருக்கு ரூ.300 விண்ணப்பக் கட்டணம் ஆகும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்