இந்திய விமானப்படையில் சேர ஆசையா? 317 காலியிடங்கள்.. ரூ.56100 சம்பளம் - முழு விபரம் இதோ !!

By Raghupati R  |  First Published Dec 24, 2023, 11:06 PM IST

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான afcat.cdac.in மூலம் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 317 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்திய விமானப்படையில் (IAF) வேலை பெற ஒரு பொன்னான வாய்ப்பு. விமானப்படை பொது நுழைவுத் தேர்வு மூலம் நீங்கள் படையில் சேரலாம். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான afcat.cdac.in மூலம் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 317 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்

Latest Videos

undefined

விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். என்சிசி சிறப்பு நுழைவுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

வயது வரம்பு

01 ஜனவரி 2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். கிரவுண்ட் டூட்டி (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) கிளை: 01 ஜனவரி 2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரிக் நிலை 10ன் கீழ் ரூ.56100 முதல் ரூ.177500 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

1. afcat.cdac.in இல் IAF AFCAT ஐக் கிளிக் செய்யவும்

2. முகப்புப் பக்கத்தில் உள்ள AFCAT 01/2024 விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. பதிவு செய்து விண்ணப்பத்துடன் தொடரவும்.

4. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தவும்

5. படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு பிரிண்ட்அவுட் எடுக்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

click me!