எச்விஎப் வேலைவாய்ப்பு: அப்ரண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!! எவ்ளவு சம்பளம் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published May 25, 2023, 5:17 PM IST

இந்த HVF ஆவடி வேலை அறிவிப்பு 2023 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம்.


ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியே வெளியாகி உள்ளது ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலியிடங்கள்:

Tap to resize

Latest Videos

Fitter (G) - Non ITI - 32
Machinist - Non ITI - 36
Welder (G&E) - Non ITI -24
Electrician - EX ITI -10
Machinist - EX ITI -38
Welder (G&E) - EX ITI -28
மொத்தம் - 168

இதையும் படிங்க: இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% ஐ தாண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் கணிப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் தொழில் துறை படிப்புகள் படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். மேலும் 10-ஆம் வகுப்பு, ITI, Ex-ITI படித்தவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பில், ஓராண்டு கால அடிப்படையில் தான் தற்காலிக பயிற்சி வழங்கப்படும். குறிப்பாக நிரந்தர வேலை வாய்ப்பு எதுவும் கிடையாது என்று கூறப்பட்டிருக்கிறது.

கல்வி தகுதி: 
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

ஐடிஐ அல்லாத (மெட்ரிகுலேஷன்/ பத்தாம் வகுப்பு) - முதல் ஆண்டு ரூ.6000 மற்றும் 2ஆம் ஆண்டு ரூ. 6600

EX-ITI (ITI பாஸ்) - முதல் ஆண்டு ரூ.7700 மற்றும் 2 ஆம் ஆண்டு ரூ. 8050

வயது வரம்பு:

இந்தப் பயிற்சிக்கு Apprenticeship Rules படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.avnl.co.in ஐ திறக்கலாம்.
  • பின்னர் மெனு பட்டியில் தொழில்/சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
  • அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும்.
  • இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2023 ஆகும்.

click me!