குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் எப்போது வெளியாகும்? TNPSC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

By Ramya s  |  First Published Aug 17, 2023, 4:00 PM IST

குரூப் 1, 2 உள்ளிட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி (TNPSC), தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்கள் ஆகியவை ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. மேலும் போட்டி தேர்வுகளின் தேதி அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகளின் முன்மொழியப்பட்ட மாத அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது 18 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

குரூப் 1, 2 உள்ளிட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தவிர குரூப் 3 உள்ளிட்ட 11 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களை  www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற இணைப்பைச் சரிபார்த்து, டிஎன்பிஎஸ்சியின் முழுமையான அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்களில் 55,071 பேர் மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN SSLC Supplementary Retotal Result:10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

குரூப் 1 தேர்வு முடிவு எப்போது?

கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வின் முடிவுகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

மற்ற தேர்வுகள்

ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைகள் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 217 பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தான் கடைசி தேதி.. நீலகிரி ஏகலவ்யா பள்ளியில் ஆசிரியர் வேலை.. முழு விவரம் இதோ...

ஒருங்கிணைந்த பொறியியல் ஆதரவு சேவைகளுக்கான தேர்வு மே மாதம் நடைபெற்றது. 1083 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 825 பணியிடங்களுக்கான முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!