பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) JRF பணிக்குத் 9 காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) JRF பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான அறிவிப்பில் 9 இடங்கள் காலியாக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் மாதந்தோறும் ரூ.37000 மாதாந்திர உதவித்தொகையைப் பெறலாம். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்படும்.
டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்வு செய்யப்படும் நபர் 2 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுவார். இந்த ஒப்பந்தம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம். சம்பந்தப்பட்ட துறையில் பட்டதாரியாகவோ முதுகலை பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
undefined
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலைவாய்ப்பு: எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மூன்று வெவ்வேறு விதமான பணியிடங்களில் தலா மூன்று காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
விண்ணபிப்பவரின் வயது 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.10.2023 முதல் 11.10.2023 வரை VRDE, PO; வாகனநகர், அகமதுநகர்-414 006 (மகாராஷ்டிரா) என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலுக்கு வரலாம். நேர்காணல் தேதி அன்று காலை 10 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழு பயோடேட்டா மற்றும் அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் NET / GATE ஆகிய போட்டித் தேர்வுகளில் போதி அளவு மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் அல்லது பொறியியல் முதுகலை பட்டப்படிப்ப முடித்திருக்க வேண்டும்.
ரோஜ்கர் மேளாவில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி!
இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள கீழே தரப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.