வெளியானது CTET முடிவுகள் 2023.. 4 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தகவல் - ரிசல்ட் பார்க்க லிங்க் உள்ளே!

By Ansgar R  |  First Published Sep 25, 2023, 5:42 PM IST

CTET 2023 Results : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CTET) 2023ன் ஆண்டுக்கான முடிவுகள் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம். முடிவுகளை காண லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் 2023ல் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) முடிவுகள் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த 2023ம் ஆண்டுக்கான முடிவுகளை தற்போது அறிவித்துள்ளது.

சென்னை நகர்ப்புற சுகாதாரத் திட்டம்.. பல துறைகளில் வேலைவாய்ப்பு.. 40,000 வரை சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?

Latest Videos

undefined

CTET தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 60 சதவீதம், ஆனால் பள்ளி நிர்வாகங்கள் SC, ST, OBC, PwD விண்ணப்பதாரர்களுக்கு சலுகைகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று CBSE வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. CTET முடிவைச் சரிபார்க்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் ரோல் எண்களைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த மாத தொடக்கத்தில் தற்காலிக விடைத்தாள் வெளியிடப்பட்டது மற்றும் ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான காலம் முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இதற்கான தேர்வு நடைபெற்றது. இந்த முறை 29 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் - தாள் 1 (1 முதல் 5 வகுப்புகளுக்கு) 15,01,719 பேரும், தாள் 2க்கு (6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு) 14,02,184 பேரும் பதிவு செய்திருந்தனர். தேர்வுகளுக்கு சுமார் 80 சதவீத பேர் வருகை தந்தனர் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலைவாய்ப்பு: எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

click me!