பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

By Narendran SFirst Published Sep 20, 2022, 7:59 PM IST
Highlights

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் 1,901 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் B மற்றும் டெக்னிக்கல் A பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரங்கள்: 

பதவிகள்:

  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் B 
  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் A

காலிப்பணியிட விவரங்கள்: 

  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் B - 1,075
  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் A - 826

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

  • 23.09.2022

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

கல்வி தகுதி:

  • இந்த பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய, விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு பதவிகளும் வெவ்வேறு கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

தேர்வு செயல்முறை:

  • இந்த ஆட்சேர்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்ட தேர்வுகளை கடந்து செல்ல வேண்டும். அடுக்கு 1 ஸ்கிரீனிங் தேர்வு மற்றும் அடுக்கு 2 எழுத்து தேர்வு இருக்கும்.

சம்பள விவரம்:

  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் B - பே மேட்ரிக்ஸ் நிலை 6-யின் கீழ் சம்பளம் ரூ. 35400 முதல் ரூ. 1,12,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • டெக்னீஷியன் A: பே மேட்ரிக்ஸ் லெவல் 2-யின் கீழ் சம்பளம் ரூ.19, 900 முதல் ரூ. 63,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
click me!