பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: பேங்க் ஆஃப் இந்தியா வங்கி
காலி பணியிடங்கள்: 1
பணியின் பெயர்: மருத்துவ ஆலோசகர்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:கனரா வங்கியில் வேலைவாய்ப்பு 2022.. எழுத்து தேர்வு கிடையாது.. எப்படி விண்ணப்பிக்கலாம்..? விவரம் இங்கே
கல்வி தகுதி:
இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனத்தில் குறைந்தபட்சம் மருத்துவ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவப் பயிற்சியாளராக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கியின் மருந்தகங்களில் இருந்து சுமார் 15 கிமீ சுற்றளவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிமானால், தேர்வு செய்யப்படும் முறையில் தரங்கள் உயர்த்தபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணலில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைக்கப்படுவர். இந்த பரிசோதனைக்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:இந்திய விண்வெளி துறையில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ