டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி தேர்வு நடைபெறுகிறது.
சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்), 7-ம் வகுப்பு படிப்பவர் அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் (1.7.2023-ன் படி) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 11½ வயது முதல் 13 வயது வரை (1.7.2023-ன்படி) (அவர்கள் 2.7.2010-க்கு முன்னதாகவும் 1.1.2012-க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது).
தோ்வு நடைபெறும் நாள் 3.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகும். தேர்விற்கான திட்டப்படி ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்) - 2 மணி நேரம், கணிதம் (200 மதிப்பெண்கள்) - 1.30 மணி நேரம், பொது அறிவு (75 மதிப்பெண்கள்) - 1 மணி நேரம், கணிதம் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க:ரூ.2.50 லட்சம் மாத சம்பளத்தில் இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விண்ணப்பக் கட்டணம் காசோலை மூலம் அல்லது இணையவழியாக பொதுபிரிவினர் ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் - ரூ.555 செலுத்த வேண்டும். விண்ணப்பம் பெற கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 என்ற முகவரிக்கு, விரைவு அஞ்சல் வாயிலாகவும், கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேராடூன் (வங்கி குறியீடு 01576)-ம் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.10.2022 மாலை 5.45 மணிக்குள் கிடைக்க பெற வேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகள் உள்ளன. எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும்.
மேலும் படிக்க:இந்திய விண்வெளி துறையில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ
இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ராணுவ கல்லூரி முகவரிக்கு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.