33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நாளை முதல் ஜூலை 5 வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த காலியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேர்வு தேதி தற்காலிகமானது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப செயல்முறை தொடக்க தேதி : 06.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி : 05.07.2023
தேர்வுக்கான தற்காலிக தெதி : 10.09.2023