வங்கி வேலை வேண்டுமா? 8812 காலிப் பணியிடங்களுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்!

By SG Balan  |  First Published Jun 3, 2023, 2:54 PM IST

வங்கி பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பிரிவுகளில் 8812 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


வங்கி பணியாளர் தேர்வாணையம் ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ (IBPS RRB PO) ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் பதிவை ஜூன் 1, 2023 அன்று தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் வங்கிப் பணியாளர் தேர்வாணயத்தின் அதிகாரப்பூர்வ தளமான www.ibps.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்கேல் I,  ஸ்கேல் II மற்றும் ஸ்கேல் III ஆகிய மூன்று பிரிவுகளில் இந்தி வேலைவாய்ப்புக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 21, 2023 அன்று முடிவடையும். இதன் மூலம் 8812 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Tap to resize

Latest Videos

TNPSC : குட் நியூஸ் வந்தாச்சு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்

காலிப் பணியிடங்கள்: 

Office Assistant (Multipurpose) பணிக்கு 5538 பேரும், Officer Scale-I (Assistant Manager) பணிக்கு 2685 பேரும், Officer Scale-II (Agriculture Officer) பணிக்கு 60 பேரும், Officer Scale-II (Marketing Officer) பணிக்கு 3 பேரும், Officer Scale-II (Treasury Manager) பணிக்கு 8 பேரும், Officer Scale-II (Law) பணிக்கு 24 பேரும், Officer Scale-II (CA) பணிக்கு 21 பேரும், Officer Scale-II (IT) பணிக்கு 68 பேரும், Officer Scale-II (General Banking Officer) பணிக்கு 332 பேரும், Officer Scale-III பணிக்கு 73 பேரும் வேலையில் சேர்க்கப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்தவர்கள், எம்பிஏ (சந்தையியல்), சிஏ முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணியிடத்துக்கும் உரிய கல்வித்தகுதி விவரம் அதிகாரபூர்வ அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கபட்டுள்ளது.

ரூ. 2,30,000 சம்பளத்தில் சென்னை மெட்ரோவில் வேலை.. கல்வித்தகுதி என்ன? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

வயது வரம்பு:

Officer Scale-III பணியிடங்களுக்கு 21 முதல்  40 வயதுக்குள் இருக்கவேண்டும். Officer Scale-II பணிகளில் சேர 21 முதல் 32 வயதுக்குள் இருக்கவேண்டும். Officer Scale-I பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதுக்குள் இருப்பது அவசியம். Office Assistant பணிக்கு 18 முதல் 28 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு அவற்றில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்:

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.850. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.175 கண்ணம் வசூலிக்கப்படும். கட்டணத்தை ஆன்லைனில்தான் செலுத்த வேண்டும். www.ibps.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.6.2023

LKG Admission : 2,381 அரசு பள்ளிகளில் 40,000 மழலைகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ப்பு! - அன்பில் மகேஷ் தகவல்!

click me!