அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

By Narendran S  |  First Published Sep 8, 2022, 6:27 PM IST

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Counsellor பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிறுவனம்: 

  • District Child Protection Unit (DCPU, Ariyalur)

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்:

  • Counsellor

பணியிடங்கள்: 01

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 16.09.2022

ஊதியம்:

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்தோறும் ரூ.18,536 சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

  • Counsellor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் உளவியல், சமூகவியல், சமூக பணி போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Post Graduate அல்லது Post Graduate Diploma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அனுபவம்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் ஆற்றுப்படுத்துதல் (Counsellor) பணியில் குறைந்து 01 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

வயது வரம்பு:

  • Counsellor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தேர்வு முறை:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

  • Counsellor பணிக்கு விண்ணப்பிக்க அர்வமுள்ள நபர்கள் https://ariyalur.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

முகவரி:

                                 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 
                                 இரண்டாவது தளம், 
                                 அரசு பல்துறை வளாகம், 
                                 ஜெயங்கொண்டம் சாலை, 
                                 அரியலூர் - 621 704.

click me!