CUET UG 2022 ஆன்சர் கீ வெளியீடு.. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? யுஜிசி அறிவிப்பு

By Thanalakshmi V  |  First Published Sep 9, 2022, 10:44 AM IST

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET 2022 விடைக்குறிப்பு தேசிய தேர்வு முகமையால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த CUET விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.samarth.ac.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 


பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET 2022 விடைக்குறிப்பு தேசிய தேர்வு முகமையால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த CUET விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.samarth.ac.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் எதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் cuet.samarth.ac.in இணையதளம் மூலம் நாளை வரை சமர்பிக்கலாம்.  மாணவர்கள் தங்களது பதவி எண்ணை உள்ளீடு செய்து, ஆன்சர் கீ யை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Latest Videos

undefined

மேலும் படிக்க:neet 2022ug: tamilnadu: நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி 6 % குறைந்தது: டாப்-50யில் இருவர்: உ.பி. முதலிடம்

முதலில் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cuet.samarth.ac.in. செல்ல வேண்டும். பின்னர் முகப்புப் பக்கத்தில், 'Display of Provisional Answer Keys, and Question Paper with Recorded Responses for Answer Key Challenge for Common University Entrance Test [CUET (UG)] – 2022” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

அதில் கேட்கப்பட்டுள்ள உங்கள் உள்நுழைவு விவரங்களை பதிவிடவும். பின்னர் CUET 2022 பதில் விடைக்குறிப்பு உங்கள் திரையில் தெரியும். அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதனை சமர்பிக்கலாம். 

மேலும் படிக்க:NEET UG Result: நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் .. இந்திய அளவில் 30வது இடத்தை பிடித்த திரிதேவ் விநாயகா..

CUET 2022 விடைக்குறிப்பு, இணையதளத்தில் நாளை வரை கிடைக்கும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் நாடு முழுவதும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளின் அடிப்படையில் இறுதி விடைத்தாள் குறிப்பு பின்னர் தயாரிக்கப்படும் என்று NTA தெரிவித்துள்ளது. 

பின்னர் அதன் உதவியுடன், CUET முடிவுகள் 2022 தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.  இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் CUET முடிவுகள் வெளியிடப்படும் என்றும் யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். செம்டம்பர் 15 ஆம் தேதியோ அல்லது அதற்கு 2 நாட்கள் முன்போ CUET UG 2022 தேர்வு முடிவை வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்காக இணையதளங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

click me!