திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கௌரவ ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கல்வித் தகுதி & வயது வரம்பு
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்ற தோட்டக்கலைத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று, NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 70 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
undefined
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து,
விண்ணப்பப் படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன், சான்றிதழ்களின் அனைத்து சுய சான்றளிக்கப்பட்ட நகல்களும் ஒரு PDF கோப்பாக மாற்றப்பட்டு, hodhorti@cutn.ac.in என்ற இந்த மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
மாத சம்பளம்
இது கௌரவ ஆசிரியர் பணி என்பதால் ஒரு வகுப்பிற்கு 1500 விதம் மாதம் 50,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அறிவிப்பு தெரிவிக்கின்றது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி (06.10.2023) வரை மேலே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் தகவல்களை பெற https://cutn.ac.in/wp-content/uploads/2023/09/Dept-of-Horticulture-Walk-in-Interview-Advertisement-for-Guest-Faculty_21092023.pdf என்று பக்கத்தை பார்வையிடவும்.
ரூ.1,15,000 சம்பளம்.. TNPSC வேலைவாய்ப்பு.. என்ன தகுதி? முழு விவரம் உள்ளே..