மத்திய அரசின் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசு வேலை
அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் தனியார் வேலையையே துறந்து விட்டு போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர். இத்தகைய இளைஞர்களுக்கு பயனளிக்கும்விதமாக மத்திய அர்சு நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன நிறுவனம்? என்னென்ன பணியிடங்கள்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் (NIEPA) இயங்கி வருகிறது. டெல்லியை தலைமியிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் ஆலோசனையில் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், கீழ் பிரிவு எழுத்தர் (LDC) பணியிடங்களுக்கு 10 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு, தேர்வு முறை
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள். அத்துடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அடிக்கும் அளவுக்கு ஆங்கில தட்டச்சு தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும். 18 வயது முதல் 27 வயது வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். SC/ ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள்,PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,PwBD (SC/ ST) - 10 ஆண்டுகள்,PwBD (OBC) - 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு உண்டு.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://niepa.ac.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முன்கூட்டியே கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்ப தேதி கடந்த 21ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 14ம் தேதி வரை விண்ணப்ப அவகாசம் உள்ளது.
விண்ணப்ப கட்டணம் என்ன?
விண்ணப்ப கட்டணமாக ST/SC/PWD பிரிவினர்கள் ரூ.500ம், மற்ற பிரிவினர்கள் ரூ.1000மும் செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் 63,200 வரை சம்பளம் கிடைக்கும். பிளஸ் 2 முடித்த தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.