டிகிரி முடித்தாலே போதும்! தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jan 23, 2025, 4:47 PM IST

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. company secretary மற்றும் Intermediate Passed பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, சம்பளம், வயது உள்ளிட்ட விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.


தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். 

பணி விவரம்:

Latest Videos

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. company secretary பணிக்கு ஒரு இடங்களும், Intermediate Passed பணிக்கு 4 இடங்கள் என மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி:

company secretary பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் 
company secretary தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், Intermediate Passed பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ICSI கீழ் Intermediate (Executive level) தகுதி பெற்றிருப்பது ரொம்ப முக்கியம். 

சம்பளம் விவரம்:

company secretary பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளமும், Intermediate Passed பணிக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும். 

வயது விவரம்:

company secretary பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். Intermediate Passed பணிக்கு 22 பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தினை www.tnpdcl.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஜனவரி 31 

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!