சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிகள் இன்று வெளியிடப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
2021 -22 கல்வியாண்டில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சிபிஎஸ்இ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பின் இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஜூலை 4 ஆம் தேதி (இன்று) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க:சிபிஎஸ்இ தேர்வு முடிவு தேதி மாற்றம்.. 10 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 13 ல் வெளியீடு என தகவல்..
ஆனால் தற்போது கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்று தெரியவந்துள்ளது. சிபிஎஸ்இயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், 10வது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படாது என்று TOI இடம் தெரிவித்துள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் எதிர்ப்பார்ப்போடு இருந்த நிலையில், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனிடையே சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிகள் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவே வெளியாகலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தேர்வு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடிவு அறிவிக்கப்படும். ஆனால் இதுக்குறித்து இடைநிலைக்கல்வி தேர்வு வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும் படிக்க: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின் மாணவர்கள் செய்ய வேண்டியது என்னென்ன..? முழு விவரம்..
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை, cbse.gov.in என்ற இணையதளம் மூலம் பார்க்கலாம். எஸ்எம்எஸ் மூலமாக மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். சிபிஎஸ்இ வாரியம் சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போர்ட்டலான பரிக்ஷா சங்கம்( http://parikshasangam.cbse.gov.in/. ) எனும் இணையத்தளத்தில் மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். DigiLocker எனும் செயலி மூலம் மாணவர்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.