அடி தூள்.. 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போலீஸ் வேலை.. உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்.. முழு விவரம் இதோ.

By Ezhilarasan Babu  |  First Published Jul 1, 2022, 1:36 PM IST

இரண்டாம் நிலை காவலர் தீயணைப்பு படை வீரர் சிறைக்காவலர் என 3,552 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படவுள்ளதாகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இரண்டாம் நிலை காவலர் தீயணைப்பு படை வீரர் சிறைக்காவலர் என 3,552 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படவுள்ளதாகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை தீயணைப்பு படை, சிறை துறைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருந்து வருகிறது. அதில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும்  தீயணைப்பாளர் பதவிகளுக்கு  இந்த ஆண்டு நேரடி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 7 முதல் ஆகஸ்டு 15 வரை இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படையில் 654 காலி பணியிடங்களும், சிறைக் காவல் பிரிவில் 8 இடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: சொந்த தொகுதியிலேயே எடுபடாத ஓபிஎஸ்..! எடப்பாடிக்கு எதிராக 7 நிமிடத்தில் முடிந்த போராட்டம்

கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, ஜூலை 1ஆம் தேதி அன்று அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்றும், பொதுப்பிரிவினருக்கு 26 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் எனில் அதிகபட்சம் 28 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், எஸ்சி எஸ்டி பிரிவினர் எனில் 31 வயதுக்கு மேற்பட்டவராக  இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மூன்றாம் பாலினத்தவர்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37வயதுக்கு மேற்பட்டவராகவும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:நுபுர் சர்மா வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது; லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

தேர்வு முறை:

தேர்வு நிலை இவர்கள் முதலில் எழுத்துத் தேர்வு உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். NSS, NCC விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வின் போது தமிழில் 80 சதவீத மதிப்பெண்களும், முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 20 சதவீத மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வினாக்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 18,200 முதல் 67 ஆயிரத்து 100 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் www.tnusrb.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் 250 ரூபாய்  இணைய வழியிலோ இணையம் இல்லா வழியில் சலான் முறையில் எஸ்பிஐ வங்கியில் செலுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மொத்த காலி பணியிடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5%, விளையாட்டு பிரிவில் 10 சதவீதமும், ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு 3 சதவீதம் பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 1 ஆம் வகுப்பு முதல்  பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு தேர்வில் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://tnusrb.tn.gov.in
 

click me!