
பேங்க் ஆப் பரோடாவின் துணை நிறுவனமான BOB Capital Markets Limited, தற்போது Business Development Manager பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேடி வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன. இது வங்கித் துறையில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 30, 2025. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த Business Development Manager பதவிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்குத் தேர்வு இல்லை என்பது ஒரு முக்கியமான அம்சம். நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மட்டுமே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் ₹20,000 முதல் ₹30,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. மேலும், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மின்னஞ்சலின் தலைப்பில் ("Application for the post of Business Development Manager (OƯ Roll)") எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வேறு எந்தத் தலைப்பிலும் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.