அதிக சம்பளத்தில் RBI-யில் வேலை காத்திருக்கு.. கல்வித் தகுதி, சம்பளம், வயது விவரம் உள்ளே

Published : Sep 11, 2025, 12:54 PM IST
RBI

சுருக்கம்

இந்திய ரிசர்வ் வங்கி 120 கிரேடு பி அதிகாரி பணியிடங்களை நிரப்புகிறது. ரூ.78,450 முதல் ரூ.1,14,900 வரை சம்பளம் கிடைக்கும் இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு தகவல்களை காணலாம்.

நீண்ட நாட்களாக அரசு வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மிகவும் கண்ணியமான மற்றும் உயர்ந்த சம்பளமுள்ள வேலைவாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எந்தப் பணியிடங்கள்?

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் கிரேடு பி அதிகாரி பதவிகள் நிரப்பப்படுகின்றன. இதில் பொதுப் பிரிவு, DEPR பிரிவு மற்றும் DSIM பிரிவு ஆகியவை அடங்கும். மொத்தம் 120 காலிப் பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.78,450 முதல் ரூ.1,14,900 வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் மூலம் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் இருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 30 வயது வரை. இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் அனைத்தும் RBI அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.850, இட ஒதுக்கீடு பிரிவினர் ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு முறை மற்றும் கடைசி தேதி

இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் நேர்காணல் மூலம் இறுதித் தேர்வு நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை கனவு கொண்டவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று சொல்லலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Govt Job: மாதம் ரூ.35,400 ஆரம்ப சம்பளம்! உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை!
மத்திய அரசு வேலை கனவா? ரயில்வேயில் 22,000 காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா?